Monday, December 21, 2009

நான் மனிதனல்ல

துஷ்டனைக் கண்டால்
தூர விலகு.
விலகினேன்.
கோழை என்றனர்!

அன்பாய் பேசும்
அத்தனை பேருக்கும்
அடி பணிந்தேன்
அறிவிலி என்றனர்

பெண்களை கண்டால்
சகோதரிகளாக நினைத்து
பார்வை திருப்பினேன்
தரம் பிரித்தார்கள்
ஆணுக்கும் , பெண்ணுக்கும்
இடை ஜாதியென்று

சத்தியம் பேசினேன்
வக்கன்னை செய்தனர்

கடமையில் கண்ணாக இருந்தேன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர்!

என்னை
மனிதனென்று சொல்ல
யாரிகிங்கே?

வார்த்தை

நீ
செய்தால்
'சூழ்ச்சி'
நான்
செய்தால்
'ராஜதந்திரம்!'

பிடித்தவன்
பருத்திருந்தால்
'கொஞ்சம் தாட்டி!'

பிடிக்காதவன்
பருத்திருந்தால்
'தீவட்டித் தடியன் !'

மனதுக்கு பிடித்தவள்
மெலிந்திருப்பின்
'ஸிலிம்!'

கண்டுக்காதவள்
மெலிந்திருப்பின்
'ஈர்க்குச்சி !'

கொடுத்தால்
'லஞ்சம்'
வாங்கினால்
'அன்பளிப்பு!'

ஒ!
ஒளியவும்
ஒழிக்கவும்
தடுக்கவும்
தாக்கவும்தான்
இங்கே
கொட்டிக் கிடக்கிறதே
வார்த்தை