Thursday, January 14, 2010

எண்ணங்களும் மாற்றங்களும்

சிறகடித்து உலா வந்த
சின்னச்சிறு வயதில்
தீண்டாமை பாவம் என்றோம்
வரதட்சணை குற்றம் என்றோம்
புத்தகத்தில் படித்த படி
வாழ்வில் எதிர்ப்போம்
என்று வீர வசனம்
பேசினோம்....
ஆனால் இன்று???

10 வயதில் பார்வையற்றோருக்கு வாழ்க்கை தர வேண்டும்
என்று ஆசை. ஆனால் நாம் வாழ்வதற்க்கு
நமக்கே இங்கு வாழ்க்கை இல்லை.
நாம என்ன வாழ்கை தருவது என்று நமக்கு நாமே கேள்வி

14,15 வயதில் உடல் ஊனமுற்றவருக்கு வழிக்காட்ட ஆசை
இந்த அவசர கால உலகத்தில் நாம ஓட வேண்டியதாக உள்ளதே
இனி எங்கு அவர்களை
அழைத்து செல்வது நம் வழியில்
என்று எண்ணியே கலைந்தது
ஆசை...

வாழ்க்கை என்பது ஒருமுறை தான்
மனதுக்கு பிடித்த ஆண் / பெண்
உடன் வாழ்க்கை என்று வாழவும் வழியில்லை
நாம் விரும்புவர்களையும் &
நம்மை விரும்புகிறவர்களையும் வேண்டாம் என்று
விட்டு செல்லவும்
மனமில்லை ..
சுற்றதினை எதிர்த்திடவும்
துணிவில்லை
கலாச்சாரத்தையும் குலத்தையும்
பற்றியே செல்கிறது வாழ்க்கை
பிடித்தவரை மறந்து

வலிகாட்டிடாத , விரும்பி அடையாத
வாழ்க்கை
சிறு வயது முதல்
ஆயுள் முழுவதும்
எதோ ஒன்றை சார்ந்தே
செல்கிறது வாழ்க்கை பயணம்
என்னடா வாழ்க்கை ,இந்த வாழ்க்கைய , சமுதாயம், பெற்றோர் என்று மற்றவர்களை
காரணம் கூறியே நாம்
அரசியல்வாதி , பச்சோந்தி மாதிரி
நமக்கு நாமே நம் எண்ணங்களை மாத்தி கொள்கிறோம்

இது வேண்டாம்
என்று சொல்லிட மனமுமில்லை
பிடித்தாய் வாழ துணிச்சளுமில்லை
வாழ்ந்தே தீர வேண்டியா
மானிட பிறவியடா நாம்
என்ற எண்ணமே
வாழ்க்கை வாழ்வதற்கே என்று
சொல்லி சிரிகிறது ..


(உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதியது..

http://tamil.blogkut.com/uraiyaadal.php )

Monday, December 21, 2009

நான் மனிதனல்ல

துஷ்டனைக் கண்டால்
தூர விலகு.
விலகினேன்.
கோழை என்றனர்!

அன்பாய் பேசும்
அத்தனை பேருக்கும்
அடி பணிந்தேன்
அறிவிலி என்றனர்

பெண்களை கண்டால்
சகோதரிகளாக நினைத்து
பார்வை திருப்பினேன்
தரம் பிரித்தார்கள்
ஆணுக்கும் , பெண்ணுக்கும்
இடை ஜாதியென்று

சத்தியம் பேசினேன்
வக்கன்னை செய்தனர்

கடமையில் கண்ணாக இருந்தேன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர்!

என்னை
மனிதனென்று சொல்ல
யாரிகிங்கே?

வார்த்தை

நீ
செய்தால்
'சூழ்ச்சி'
நான்
செய்தால்
'ராஜதந்திரம்!'

பிடித்தவன்
பருத்திருந்தால்
'கொஞ்சம் தாட்டி!'

பிடிக்காதவன்
பருத்திருந்தால்
'தீவட்டித் தடியன் !'

மனதுக்கு பிடித்தவள்
மெலிந்திருப்பின்
'ஸிலிம்!'

கண்டுக்காதவள்
மெலிந்திருப்பின்
'ஈர்க்குச்சி !'

கொடுத்தால்
'லஞ்சம்'
வாங்கினால்
'அன்பளிப்பு!'

ஒ!
ஒளியவும்
ஒழிக்கவும்
தடுக்கவும்
தாக்கவும்தான்
இங்கே
கொட்டிக் கிடக்கிறதே
வார்த்தை